தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட பொருளாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட வேண்டும் பணிகளை முறைப்படுத்திட வேண்டும், நில அளவையர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக செவிமடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments