நாகை மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள கருணாலயா முதியோர் இல்லத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும்திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் மகனான மலர் அன்பழகன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்வில் முதியோர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல், உங்கள் இட்லி உள்ளிட்ட அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து முதியோர்கள் சார்பில் பிறந்தநாள் விழா காணும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்து கூறினர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர் அணி மற்றும் மாணவரணியைச் சேர்ந்த ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்



0 Comments