பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

 


இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Post a Comment

0 Comments