நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இறால் வளப்பில் தடை செய்யப்பட்ட பொருட்கள் (ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) குறித்து கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.. முகம் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு டாக்டர். எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உதவி பேராசிரியர் பேச்சிமுத்து தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகர் வரவேற்றார். விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாமில் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் விஜயபூரணி, நாகபட்டினம் மாவட்ட கடலோர இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் சிதம்பரம், வெள்ளபள்ளம் இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழிப்புணர்வு முகாமில் ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகர் கலந்து கொண்டு ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் பாதிப்புகள் மற்றும் இந்திய கடலுணவு ஏற்றுமதியில் அதன் தாக்கம் குறித்து பேசினார்.
முகாமில்கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின், தேசிய நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் களமேலாளர் சரவணன் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்



0 Comments