திருக்குவளை அருகே சேதமடைந்த சாலையில் மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்



நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோகனாம்பாள்புரத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாட்டியக்குடி – இறையான்குடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மோகனாம்பாள்புரம் சாலைக்கு போதிய சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

கடந்தாண்டு அமைக்கப்பட்ட கப்பிச்சாலை தற்போது  சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது . நடைபயணமே சிரமமாக மாறியுள்ள இந்தச் சாலையில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், விவசாய பணிக்குச் செல்லும்   தொழிலாளர்கள் என அனைவரும் தினசரி கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் தார்சாலை அமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லையாம்‌. 

குறிப்பாக அவசரநேரங்களில் ஆம்புலன்ஸ் கூட உள்ளே பிரவேசிக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் தற்பொழுது  மழைக்காலங்கள் என்பதால் அதிக அளவு மழை நீர் தேங்கி  வயலும் சாலையும் ஒரே மட்டத்தில் நீரால் மூழ்கி மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இரவு வேளையில் அங்கு போதிய தெரு விளக்கு வசதி இல்லாததால் நிலைத்தடுமாறி வாகனத்தில் ஒருவர் கீழே விழும் அரங்கேறி வருகிறது.இந்த நிலையில், கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையிலே நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனாம்பாள்புரம் பகுதியில் உள்ளகப்பகுதியில் சிமெண்ட் சாலை இருந்தாலும், அங்கிருந்து பிரதான சாலைக்கு செல்லும் கப்பிச்சாலை சேதமடைந்து சேரும் சகதியமாக   உள்ளதாகவும், உடனடியாக தார் சாலையாக அமைத்து தராத பட்சத்தில்  அடுத்த கட்டமாக நடவு செய்த பயிர்களுக்கு  உரமிட்டு போராட்டம் நடத்துவோம் எனவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 


Post a Comment

0 Comments