விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாதமுத்து – பூண்டிமாதா தம்பதியினருக்குக் குழந்தை தத்தெடுத்துத் தருவதாகக் கூறி, சேலம் மாவட்ட அதிமுக மாணவர் அணி துணைச் செயலாளர் அருண்குமார் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தம்பதியினரை வரவழைத்த அருண்குமார், தனது தாய்மாமன் வெற்றிவேலை போலி இன்ஸ்பெக்டராக நடிக்க வைத்து, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தைப் பறித்துள்ளார்.
இந்த மோசடி குறித்துப் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அருண்குமார், வெற்றிவேல், பழனிபாரதி, மதுராஜ், ஏசுராஜ் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காவல்துறையின் விசாரணையில் இந்தக் குற்றச் செயல் அம்பலமாகி, அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அருண்குமாரின் இந்தச் செயல் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, சேலம் மாவட்ட அதிமுக மாணவர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்த அருண்குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, இன்று (நவ. 23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments