புதுவாயல் அருள்மிகு பவானி பூங்காவனத்தம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது...... திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்......


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள பவானி பூங்காவனத்தம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதனைத் தொடர்ந்து கடந்த 21ம் தேதி கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் கோ பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து மகா தீபாரதம் நடைபெற்றது.

 அதனைத் தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு  சாமி தரிசனம் செய்தனர்   இந்நிகழ்ச்சியில் புதுவாயல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் கோவில் பொறுப்பாளர்கள் செல்வம், புருஷோத், முரளி, விஜய் ,ரஞ்சித், தமிழரசு கிராம நிர்வாக உறுப்பினர்கள் ஆனந்தன், குணசேகரன், சாமிதுரை, ஆனந்தன்  ,டில்லி துரை, பாலு, பிரபு, வெங்கடேசன், ராஜேஷ், கணேஷ், சுரேஷ், இளவரசன், ரவிச்சந்திரன், பாக்யராஜ், வெங்கடேசன், வரதராஜன், குண செல்வம், புருஷோத், ஜெயராஜ், ராஜ்குமார் ஆலய அர்ச்சகர் குசால் தாஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments