கந்தூரி விழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை-வேளாங்கண்ணி:
சென்னை எழும்பூரில் இருந்து இம்மாதம் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06137) அதே நாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (06138) டிசம்பர் 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அதே நாள் மதியம் 3.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.
விழுப்புரம்-நாகை:
இதேபோல் விழுப்புரத்தில் இருந்து இம்மாதம் 30-ந் தேதி காலை 9.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் அதே நாள் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து அதேநாள் மதியம் 1.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் அன்று மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.
சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி இடையேயான சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments