சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் சதீஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது சதீஷுக்கு வழங்கிய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. மேலும் 20 வருடங்களுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



0 Comments