நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்ளை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் (தேர்தல் பிரச்சார மேலாண்மை) ராஜ் மோகன்,துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் போராட்டம் நடைபெறும் அம்பத்தூருக்கு நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6-வது மண்டல தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் தற்போது பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 31.07.2025 பணி நிலைமையிலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் 119 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி என்ற நான்கு தூய்மை பணியாளர்கள் கடந்த 17-ந்தேதி முதல் 10 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்ளை த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் (தேர்தல் பிரச்சார மேலாண்மை) ராஜ் மோகன், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் போராட்டம் நடைபெறும் அம்பத்தூருக்கு நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று த.வெ.க. நிர்வாகிகள் உறுதியளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேறு வடிவத்தில் போராட்டத்தை தொடருமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்தார்.
உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழலில் உண்ணாவிரதம் தொடரும் நிலையில், அவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு த.வெ.க. சார்பில் ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.


0 Comments