நாகை மாவட்டத்தை சேர்ந்த 25 முதுநிலை பட்டதாரி உயிரியல் ஆசிரியர்களுக்கு வனவிலங்குகள் பறவைகள் பற்றி வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் வனத்துறை சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வன உயிரின காப்பாளர் கே. பார்கவா தேஜா வழிகாட்டுதலில் நடைபெறும் இப்பயிற்சி முகாமின் முதல் நாளான இன்று வன உயிரினங்கள் பற்றி ஒலி ஒளி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி புத்தகங்கள் கையேடுகள் வழங்கப்பட்டன.
இரண்டு நாள் முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் நாகை மாவட்டத்தில் 500 மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. பாப்பா கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ் ஆனந்தன், மாவட்ட ஆட்சியரகத்தை சேர்ந்த பசுமைத் தோழர் கே.ஷானு, பள்ளி துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி பள்ளித் தலைமை ஆசிரியை கே. ஜெயலக்ஷ்மி பட்டதாரி ஆசிரியர் எஸ் . குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் எல். ஸ்யாம் சுந்தர் வனவர் எஸ்.அகிலா வனக்காப்பாளர் எம். ஆயிஷா மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்



0 Comments