திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் எஸ் ஐ ஆர் தீவிர திருத்த பணி குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அறிவுறுத்தலின்படி நகர அவை தலைவர் ஜி. ராஜேந்திரன் முன்னிலையில் நகர செயலாளர் க. சு.தமிழ் உதயன் தலைமையில் எழில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமை உரையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நகர் முழுவதும் நலதிட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்றும் SIR கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள BLO க்கள் நியாமானமுறையில் பணிசெய்கிறார்களா என BLA 2,BLC க்கள் கண்காணித்து விழிப்புணர்வோடு தீவிரமாக திருட்டு ஓட்டை தடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய அயராது பணியாற்ற வேண்டும் என க.சு.தமிழ் உதயன் உரை நிகழ்த்தினார்.
இதில் நகர முன்னாள் செயலாளர் மோகன்ராஜ், மா. வி. கோதண்டன், முத்துராஜ் தன்ராஜ்,ஆனந்தராஜ் என்கின்ற சரவணன்,இந்தூஸ்தான் சீனு, எழில்,தசரதன்,சந்திரமோகன், ஜோதி முருகன்,காஜா மொய்தின், அருண்நிதி இளங்கோ மற்றும் மாவட்டம்,ஒன்றியம், நகர நிர்வாகிகள் பிற அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




0 Comments