செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை புது வாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து,தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமனிந்து நடந்து சென்று உலக சமாதானம், போதை மற்றும் விபத்து இல்லாத தமிழகமாக மாற வேண்டியும் மற்றும் உலக சமாதானத்துக்காக நடைபெறும் இப்பேரணியை சென்னையில் உள்ள அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்தியது.இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தமுமுகவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்கள் பின்னர் அதில் தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் சென்னை புறநகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபையில் இருந்து பெரியவர்கள் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுவாழ்வு ஜெம்ஸ் பேராலயத்தின் தலைமைப் போதகர் ஐசக் டேனியல் செய்திருந்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கிறிஸ்து பிறப்பு குறித்தும் இப்பேரணி நடைபெறுவதற்கான காரணத்தை குறித்தும் செய்தியாளர்களும் எடுத்துரைத்தார்.பின்னர் அனைவருக்கும் உலக சமாதானத்தை எடுத்துரைத்து கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0 Comments