பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஊழல் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பற்றிய செய்திகள் பலமுறை வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இறந்து விட்டதாக கூட வதந்திகள் பரவியது.
அதாவது இம்ரான் கான் அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி கிடைக்காததால் அவரை சிறையில் பாகிஸ்தான் நிர்வாகம் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டிய நிலையில் பின்னர் அது உண்மை இல்லை என தெரியவந்தது.இந்த நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கு தோஷாகானா ஊழல் தொடர்பான இரண்டாவது வழக்கில் இருவருக்கும் தலா 17 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அவருடைய கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments