அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தாம்பரத்தில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக சார்பில் பகுதி செயலாளர் மார்கெட் ஞானபால் தலைமையில், பகுதி பொருளாளர் ஜார்ஜ் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளரும், தாம்பரம் சட்ட மன்ற தொகுதி பொருப்பாளருமான மா.செழியன் கலந்து கொண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி செயலாளர் கேட் தர்மா, மத்திய பகுதி செயலாளர் என்.ஆர்.ஆனந்த், தெற்கு பகுதி துணைச் செயலாளர் டி.ஏழுமலை, மேற்கு பகுதி நிர்வாகிகள் பழனிவேல், 60 வட்டச் செயலாளர் ராகவன், சதீஷ், வட்டச் செயலாளர்கள் காந்தி, யூனக், ரமேஷ், தெற்கு பகுதி வட்டச் செயலாளர் காந்தி அண்ணாமலை எம்.இளங்கோ மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments