தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற கும்மிடிப்பூண்டி தொகுதி டிசம்பர் 30 தேதியும் பொன்னேரி தொகுதி ஜனவரி 5. தேதியும். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதற்கான இடத்தை தேர்வு செய்ய திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம்.பி பலராமன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் சென்னை-கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பெருவாயல்,கவரப்பேட்டை, தமிழக ஆந்திர எல்லை உள்ளிட்ட மூன்று இடங்களை பொன்னேரி தொகுதிக்கான. ஆண்டார்குப்பம் ஊராட்சியில் ஆய்வு செய்தனர்.
அப்போது கூட்டத்திற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்தும் இடம், கட்சித் தலைவர்களின் வாகனங்கள் வந்து செல்ல தடையில்லா வழிமுறைகள் குறித்தும், தேவையான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ் விஜயகுமார்.கும்மிடிப்பூண்டி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத். மாணவரணி மாவட்ட செயலாளர் ராகேஷ்., மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத்குமார், கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பல்லவாடா ரமேஷ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இமயம் மனோஜ். மு க சேகர், ஓடை ராஜேந்திரன் வெங்கடகிருஷ்ணன். அருள் ஸ்ரீதர். உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




0 Comments