மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் திருமத்திக்குளத்தில் வண்டல்மண் எடுக்க 9.8.2024,அரசு அனுதியுடன் சென்ற ஆர்.கே.குகன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த கீழையூர்குமார், தேரிழந்துர் சஞ்சய் என்பவர்கள் மண் எடுக்கவிடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.வட்டாட்சியரிடம் வாங்கிய 30 நாட்கள் கால அவகாசத்தில் வண்டல் மண் எடுக்க இயலவில்லை.
இதுகுறித்து ஆர்கே குகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்து தன்னை வண்டல் மண் எடுக்க தடுக்கின்றனர் ஆகவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். 22.6.2025 அன்று தாசில்தார் ஓர் உத்தரவை அளித்து 30 நாட்களுக்குள் வண்டல் மண் எடுக்க உத்தரவு அளித்திருந்தார்.அதை எடுத்துச் சென்று வண்டல் மண் எடுக்க முயற்சித்தபோது மீண்டும் அதே நபர்கள் தகராறு செய்தனர்.
பின்னர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.குகன் ரிட் மனு ஒன்றை அளித்து அதன் அடிப்படையில் 10-7-25 ஓர் உத்தரவிட்டது.அதை வாங்கிவந்து தாசில்தாரிடம் 24.7.25 அனுமதி வாங்கி வண்டல்மண் எடுக்க முற்பட்டபோது, கீழையூர்குமார் மற்றும் தேரிழந்தூரை சேர்ந்த சஞ்சய் உட்பட பல நபர்கள், பொய்யான உத்தரவு என்று கூறி மீண்டும் தடுத்துவிட்டனர். தாசில்தாரும் போலீசும் எடுத்துச் சொல்லியும் வண்டல்மண் எடுக்க முடியவில்லை.இது குறித்து ஆர்.கே.குகன் மயிலாடுதுறை நீதிமன்றத்தை நாடி மண் எடுக்க தடுத்தவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிகை எடுக்க வேண்டியுள்ளார்.உயர்நீதிமன்ற ரிட் உத்தரவை மதிக்காமல் வண்டல் மண் எடுப்பதை தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என குத்தாலம் போலீசாருக்கு மயிலாடுதுறை நீதித்துறை நடுவர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து குத்தாலம் போலீசார் வண்டல் மண் எடுக்கவிடாமல் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தகராறில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments