மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மக்கள் பணியாளர் சங்கம் குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக கலந்தாலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.மனோகரன் வரவேற்றுபேசினார்.சங்கசெயல்பாடுகள்,மற்றும் மாநில செயற்குழுவில் பங்கேற்பது குறித்து மாவட்ட தலைவர் மு.க.சங்கர் விரிவாகபேசினார்.
பெண் பணியாளர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளராக ஆனந்தி, துணை ஒருங்கிணைப்பாளராக லட்சுமி ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் ஒரே இடத்தில் சம்பளம்,காலமுறை ஊதியம் ஆகியன குறித்து தமிழக அரசை கேட்டுகொள்வதென தீர்மானம் இயற்றபட்டது.கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன்,பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிறைவாக மகேந்திரன் நன்றி கூறினார்.

0 Comments