பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைப்பு


திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் டிட்வா புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனால் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் பறவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளம் அமைந்துள்ள வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று ஆந்திர-தமிழ்நாடு கடற்கரை பகுதியில் ஜமிலாபாத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து கொண்டது.

வீட்டின் உரிமையாளர்கள் முன்னாள் கவுன்சிலர் பி.எஸ்.ஜமாலுக்கு தெரியப்படுத்த அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நரசிம்மன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த நிகழ்வின்போது சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் ஹாஜா மொய்தின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments