சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றியவரும் பெரியசாமி, 59, என்பவரை அணுகியுள்ளார்.

பெயர் மாற்றம் செய்வதற்கு பெரியசாமி 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட 15,000 ரூபாயை கொடுத்த அனுப்பியுள்ளனர்.
அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில், ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை பெரியசாமியிடம் ஈஸ்வரன் வழங்கினார்.அப்போது அங்குறைந்திருந்த போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான முதுநிலை பெரியசாமி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தபோது மயக்கம் வருவதாக சேரில் அமர்ந்து கொண்டார். அவர் மயங்கி விழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காரில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர் மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

0 Comments