திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் சார்பாக பில்டர்ஸ் எக்ஸ்போ-2026

 


திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 6-வது முறையாக நவீன பில்டெக் எக்ஸ்போ-2026 ஜனவரி மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

எக்ஸ்போவினை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் Dr. மோனிகா ராணா இ.ஆ.ப  திறந்து வைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

எக்ஸ்போ விழாவிற்கு கௌரவ விருந்தினராக திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழத்தின் தலைவர் முனைவர் என்.செண்பக விநாயக மூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

எக்ஸ்போவில் மொத்தம் 50 ஸ்டால்கள் அமைந்துள்ளன. நவீன பொருட்களான டைல்ஸ், டிம்பர்ஸ்- டோர்ஸ் ஸ்டீல்ஸ், சிமெண்ட், வங்கிகள், கிரானைட் புரோமோட்டர்ஸ், சோலார், பால்சீலிங் பெயிண்ட் மற்றும் இதர கட்டுமானப் பொருட்களின் ஸ்டால்கள் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் புதிய கட்டுமான உத்திகளுடன் அமைந்துள்ளன.

திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட் சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் 33-ஆவது ஆண்டில் இந்த எக்ஸ்போ நடைபெறுகிறது. இந்த எக்ஸ்போவிற்கு சங்கத்தின் தலைவர் பொறி. சி.முத்துக்குமார். செயலாளர் பொறி. எஸ்.பேராட்சி செல்வன், பொருளாளர் பொறி, எஸ். பீர்முகைதீன், கன்வீனா பொறி எஸ்.உலகநாதசங்கர். கோ-கன்வீனர் பொறி பி.இமயவரம்பன் மற்றும் பத்து கமிட்டி உள்ளடக்கிய 60 உறுப்பினர்கள் ஆகியோரது மேற்பார்வையின் கீழ் எக்ஸ்போ ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. எக்ஸ்போவில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. 

Post a Comment

0 Comments