ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கோத்தகிரி நகராட்சி ஆணையர் மற்றும் அவரது உதவியாளர் கைது

 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2004 முதல் குன்னூர்  நகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இளம்பருதி கடந்த ஆண்டு கூடுதலாக கோத்தகிரியும் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக  மாற்றப்பட்டது. அந்தப் பொறுப்பையும் இளம்பரிதி அவர்களுக்கே ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. குன்னூர் நகராட்சியில் பொறுப்பேற்றா நாள் முதல்  நகராட்சி ஆணையர் மீது கட்டிடம் கட்டுவதற்கு ஆணையர் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில் கோத்தகிரியில் உதிரி பாகம் கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவர் கடையை புதிதாக கட்டுவதற்கு டிடிசி அப்ரூவல் வாங்கி பழைய  கடையை இடித்து புதிதாக 2500 சதுர அடி  கட்டுவதற்கு கட்டிடப்  பணியை துவங்க நகராட்சியில் அனுமதி வாங்குவதற்காக நகராட்சி ஆணையர் அணுகியுள்ளார். ஆணையர் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.6 லட்சம் கேட்டுள்ளார்.


 ஒரு லட்சம் ரூபாய் குறைத்து ஐந்து லட்சம் கொடுத்து விடுங்கள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். முதல் கட்டமாக   இரண்டு லட்சம் கொடுங்கள் கட்டிடப் பணியை தொடங்கலாம் என்று கூறியுள்ளார் ஆணையாளர் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களுக்கு தகவல் தெரிவித்தார் ஊழல் தடுப்பு DvAc துறை லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுறுத்தலின் பெயரில் ரசாயனம் தடவிய ரூபாய் இரண்டு லட்சத்தை குன்னூரில் உள்ள நகராட்சி ஆணையர் தங்கியிருந்த முகாமிற்குச்  சென்றனர் அங்கு ஆணையரின் உதவியாளர் விக்னேஷ் என்பவர் இரண்டு லட்சம் லஞ்சம் பணத்தை வாங்கி முகாமில் தங்கி இருந்த நகராட்சி ஆணையர் இளம்பரிதி இடம் கொடுத்தபோது இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வாளர் சண்முக வடிவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர் லஞ்சப் பணம் 2 லட்சம் ரூபாயை ஆணையார் இளம்பரிதி இடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

0 Comments