அரியலூர்: பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு ரூ.5லட்சம் ஊக்கப் பரிசு




அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பரப்ரஹ்மம்    ஃபவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் சார்பில் 750 மரக்கன்றுகள் மாணவர்கள் அனைவருக்கும்  பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் குமார் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவருமான பரப்ரம்மம் த.ப.முத்துக்குமரன் வழங்கி பேசுகையில் கொய்யா,நெல்லி மரக்கன்றுகள் காய் காய்க்கும் போது ரூ.500/-வீதம் பலா மரக்கன்றுகள் காய் காய்க்கும் போது ரூ.1000/-வீதம் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் வழங்கப்படும். 

முறையாக பராமரித்து வளர்த்து காய் காய்க்கும் போது 750 மாணவ, மாணவியர்களுக்கும் ஆக கூடுதல் ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் செயலாளரும் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி துணை தலைவர் உஷா முத்துக்குமரன், பள்ளி செயலாளர் வேல்முருகன்,பள்ளி இயக்குனர் சுரேஷ்,அன்னை தெரசா மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி முதல்வர் தனலட்சுமி,குமார் இன்டர்நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சத்யா,அன்னை தெரசா செவிலியர் கல்லூரி முதல்வர் கோமதி, குமார் கம்யூனிட்டி கல்லூரி முதல்வர் எலிசபெத் சாந்தா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் பாலமுருகன் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கற்பகம், பெற்றோர்கள்,  நர்சிங் கல்லூரி  மற்றும் பள்ளி ஆசிரியர் அறிஞர் பெருமக்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments