அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அவர் பேசுகையில் மாணவ மாணவிகள் முதலில் உண்மையாக இருக்க வேண்டும்,அனைவரும் விடா முயற்சியுடன் தெளிவாக நன்கு படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும், அதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லித் தர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் செரின் சித்தாரா, மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள்,அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.10, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பள்ளியின் சார்பாக வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டது.முடிவில் பள்ளியின் ஆசிரியர் பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.



0 Comments