திருக்குவளை அருகே மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம் அனுசரிப்பு..... 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி கோஷங்கள்......


 நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா பாங்கல் நால்ரோடு பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாங்கல் நால்ரோடு கடைத்தெருவில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில், மகாத்மா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அகிம்சை, சமத்துவம், சமூக நீதி ஆகிய காந்தியடிகளின் கொள்கைகளைப் பேணுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை மத்திய பாஜக அரசு நீக்கியதை கண்டித்து, பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். திட்டத்தின் பெயரில் மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரை சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, மகாத்மா காந்தியின் தியாகங்களையும் தேச சேவையையும் நினைவுகூர்ந்தனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன் 

Post a Comment

0 Comments