திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் ஈக்குவார் பாளையம் ஊராட்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கழக நிர்வாகிகள் கொண்டாடும் விதமாக மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கிளைக் கழக செயலாளர்கள், BLA க்கள் என அனைவருக்கும் புத்தாடை , பொங்கல் தொகுப்பு மற்றும் நாள்காட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் வருகின்ற 2026-ல் புரட்சித் தமிழர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை தமிழக முதலமைச்சராக்க இந்த தை மாதத்தில் உறுதி ஏற்பும் என அப்போது கேட்டுக் கொண்டார் முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.







0 Comments