திருநெல்வேலி: ஆயுதப்படை காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்கள் பணியின் போது நடந்து கொள்ளும் விதம் குறித்து அறிவுரை வழங்கினார் தென்மண்டல ஐஜி


திருநெல்வேலி காவல் சரகத்திற்கு ஆய்வு கூட்டம் நடத்த இன்று (20.01.2026) வருகை தந்த  தென்மண்டல காவல்துறை தலைவர்  விஜயேந்திர பிதாரி இ.கா. ப திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை கவாத்தினை ஏற்றுக்கொண்டு, ஆயுதப்படை காவல் அலுவலர்கள் மற்றும் ஆளினர்களுக்கு பணியின் போது காவலர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், காவல்துறையின் மாண்பு குறித்தும் அறிவுரைகள் வழங்கி, காவலர்களிடம் குறை சம்பந்தமான மனுக்களை  பெற்றுக் கொண்டார். 

மேலும், முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் போக்குவரத்து அலுவல் பணி புரிவதற்காக 16 ஊர்க்காவல் படையினருக்கு போக்குவரத்து பணி சம்பந்தமான உபகரணங்கள் வழங்கி ஊர்காவல் படையினர் போக்குவரத்து அலுவல் புரியும் முறையினை முதன்முறையாக தொடங்கி வைத்தார். 

மேற்படி ஊர் காவல் படையினர் களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை ஆகிய காவல் நிலையங்களில் போக்குவரத்துக் காவல் பணிபுரிய நியமிக்கப்பட்டனர். மேற்படி நிகழ்வில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  P. சரவணன் இ .கா .ப , திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் N.மணிவண்ணன், இ .கா .ப மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். V. பிரசண்ண குமார், இ .கா .ப ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments