திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா


திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி.பிரசண்ண குமார், IPS., தலைமையில்  கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் பொழுது பொங்கல் விழா அனைவராலும் விரும்பி கொண்டாடப்படும் ஒரு பண்டிகை அதை இணைந்து கொண்டாடியதில் மகிழ்ச்சி என்றும் கூறினார். மேலும், அனைத்து காவல்துறையினர்  மற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர் ஆகியோருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments