அரியலூர்: உடையார்பாளையம் நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.தமிழர் திருநாளான சமத்துவ பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண் பானையில் சர்க்கரை பொங்கலிட்டு, கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து,குத்து விளக்கு ஏற்றி அதன் பிறகு சூடம் ஏற்றி சூரிய பகவானுக்கு மகா தீபாராதனை காட்டி, பிறகு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் செரின் சித்தாரா முன்னிலை வகித்தார்.பின்னர் பசு மாடு, ஜல்லிக்கட்டு காளை,வண்டி மாடுகளுக்கு தீபாராதனை காட்டி சர்க்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்,இரு பால் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் பள்ளியின் ஜேர்மன் சிவக்குமார் சர்க்கரை பொங்கல் மற்றும் கருப்பு வழங்கினார்.முடிவில் ஆசிரியர் பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments