நாகையில் பழைய நாணயங்கள் கண்காட்சி..... மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது


நாகப்பட்டினம் மாவட்டம், தேசிய மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பழைய நாணயங்கள் மற்றும் பழைய பணங்கள் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  ஒரே நேரத்தில் வரலாற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கண்காட்சியை கே. எஸ். முகமது சித்தீக் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்.இதில் பழைய காலத்து நாணயங்கள், காசுகள், பழைய பணங்கள், பழைய பாஸ்போர்ட்கள், பழமையான பத்திரங்கள், செம்புகள் உள்ளிட்ட அரிய பொருட்களுடன்,துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பழைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைய நாணயங்கள், காசுகள், டாலர்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், காட்சிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளின் வரலாற்றுப் பின்னணியை மாணவர்களிடமே கேட்டு அறிந்தனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், அறிவை பகிரும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

கண்காட்சியை பார்வையிட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் இதயத்தில் வரலாற்றின் மதிப்பையும், பாரம்பரியத்தின் பெருமையையும் விதைக்கும் என பாராட்டினர்.இந்த நிகழ்ச்சி, பாடப்புத்தகங்களைத் தாண்டி, மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து அனுபவித்த ஒரு உயிர்ப்பான வரலாற்று மேடையாக அமைந்தது என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments