அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன்,மாவட்ட ஊடக பொறுப்பாளர் காத்தவராயன், நகர ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நடராஜன் கலந்து கொண்டு சென்னையில் நடைப்பெறும் நூற்றாண்டு விழா, தேர்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவாக பேசினார்.
![]() |
இந்த கூட்டத்தில் உடையார்பாளையம் 3 சென்ட் பகுதியில் 23 ஆண்டுகளாக வசித்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், மீன்சுருட்டி பகுதியில் அதிக ஊராட்சி உள்ளது.அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகரில் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை கட்டி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் ஐயனார் அனைவருக்கும் நன்றி கூறினார்.


0 Comments