ஜெயங்கொண்டத்தில் பட்டியலின சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்று கூறிவிட்டு வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் அணி வழக்கறிஞர் தலைவர் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக நகர தலைவர் வரதராஜன் வரவேற்று பேசினார்.

 ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி தலைவி சந்திரா ராமச்சந்திரன்,  துணைத் தலைவி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்த நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் மாவட்டத் துணைத் தலைவர் ஜெயக்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், சமூக ஊடகப் பிரிவு தலைவர் சக்திவேல், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில்  2021 தேர்தல் வாக்குறுதியில் ஏழை எளிய பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என கூறி வாக்குகளை பெற்றுவிட்டு திட்டங்களை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து  கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


கூட்டத்தில் பட்டியல் அணி பொதுச்செயலாளர் விக்னேஷ், மாவட்ட செயலாளர்கள் ராஜாராம், நாகராஜன் ஓ பி சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முடிவில் ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய தலைவர் ராமு நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments