உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அரசு பேருந்து..... அச்சத்தில் பயணிகள்



 சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசுக்கு சொந்தமான பேருந்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற, புறநகர் பேருந்துக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன, பல பேருந்துகள் சரிவர கட்டமைப்பு இல்லாமல் இருந்து வருவதால் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

இந்த நிலையில் காரைக்குடியில் இருந்து புதுவயல் நோக்கி இயக்கப்படும் 2C என்ற பேருந்துக்குள் கம்பிகள் விடுபட்டு, ஓட்டைகள் நிறைந்து காணப்படுவதால் அப்பேருந்து செல்லும் பயணிகள் அச்சுத்துடனையே சென்று வருவதாகவும் கூறும் பெண் ஒருவர், எந்தப் பத்திரிக்கையில் செய்தி பதிவு செய்ய சொன்னாலும் எவரும் பதிவு செய்வதில்லை என்றும், சமூக அக்கறையுடன் நீங்கள் மட்டுமே பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், உங்களின் துணிச்சலையும், நீங்கள் சார்ந்து இருக்கிற பத்திரிக்கையும் மனப்பூர்வமாக பாராட்டுவதாகவும் கூறிய நிலையில், எங்களின் உயிரோடு விளையாடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த பெண்மணி, தமிழக முழு அக்கறையும் கொண்டு பேருந்துகளை ஒரு சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.



Post a Comment

0 Comments