திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 4வது ஆண்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
(6 வயது முதல் 14 வயது )குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்கவும், மேடையில் தன்னம்பிக்கையுடன் தைரியமாக பேசும் கலையை ஊக்குவிக்கும் வகையிலும் விட்டுக்கொடுத்தல், தளரா முயற்சி சிறந்த ஊக்கம் போன்ற மனப்பான்மை வளர்க்கவும்,தமிழகம் இந்திய சார்பாக விளையாட்டில் பங்கு கொண்டு வெற்றி பெற இது ஒரு சிறந்த களமாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல் சித்தாந்த விளைவுக்கு இந்த விளையாட்டு போட்டி ஒரு தூண்டுகோலாக இருக்கும். இந்த அமைப்பின் தலைவர் திரு.பாலாஜி மற்றும் குழுவின் தன்னார்வலர்களுடன் விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.சமூக நல சிந்தனையாளர்கள், மனிதநேய பண்பாளர்கள்,மூலம் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


0 Comments