தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு நன்றி தெரிவித்து ஓய்வூதியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டம் நகர தலைவர் ஆர்.பழனிவேல் தலைமையில் நடைப்பெற்றது.நகர செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ரெங்கநாதன், துணை செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகளாக பேராசிரியர் (ஓய்வு)தஸ்தகீர், மாவட்ட தலைவர் இராஜேந்திரன், அரசு டாக்டர் சையத் கரீம், ஜெயங்கொண்டம் கருவூல கணக்காளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் கவிதை போட்டி நடத்தப்பட்டது.அதில் வெற்றி பெற்ற முதல் 4 பேருக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.கூட்டம் முடிவில் நகர துணை செயலாளர் கோவிந்தசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments