பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவர் வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு முக்கிய காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், பொன்னை பாலுவின் தாய் இறந்துவிட்டதால், இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ரவுடி பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments