திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் வினோத்குமார் ஏற்பாட்டில் கொடுர் மற்றும் ஆலாடு ஊராட்சிகளில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களை சந்தித்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகள் அடங்கிய துண்டுபச்சாரத்தை 100 நாள் பணியாளிடம் வழங்கி 100 நாள் வேலை திட்டத்தை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அழுத்தத்தினால் 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசு 125 நாட்களாக வேலையை உயர்த்தியது அத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ள முதற்கட்ட தேர்தல் வாக்குறிதியாக கழக ஆட்சி அமைந்து உடன் அதை 150 நாட்களாக மாற்றவும் மேலும் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வாரம் ஒரு முறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் திமுகவினர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 100 நாள் வேலை கிடையாது அதே போல் 2026 ல் 100 நாள் வேலை கிடையாது என மக்களை ஏமாற்று வேலைகளில் இடுபடுவதை யாரும் நம்ம வேண்டாம் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது இதேபோன்று சோழவரம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சம்பத் ஏற்பாட்டில் மாதவரம் மற்றும் பஞ்செட்டி ஊராட்சிகளில் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களுக்கு துண்டு பிரச்சாரம் விநியோகத்தில் அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகேஷ் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் செந்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஆமூர் ஆர். ராஜ்குமார் முன்னாள் தலைவர் பிரசாந்த் , கொடுர் பாஸ்கர். மேட்டு காலனி விஜயன். சுப்பிரமணி. வெள்ளாடை வாசுதேவன் கோபி. தடப்பெரூபாக்கம். ராம்கி புனித வேல். வெள்ளோடை வாசுதேவன். கோபி..ராஜாராம் , லோகநாதன், எஸ் பி அருள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .



0 Comments