முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளான தை அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோயில் படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், தை அமாவாசை இந்துக்களால் மிக முக்கிய நாளாகக் கருதப்படுகிறது. நேற்றைய தினம் (ஜனவரி 18) அதிகாலை முதலே திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வருகை தந்தனர். ஆற்றில் புனித நீராடிய பின்னர், வேத விற்பன்னர்கள் முன்னிலையில் எள் மற்றும் தண்ணீர் தெளித்து, பிண்டம் வைத்துத் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.


0 Comments