திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 29 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 11.11.2025 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, இன்று (13.01.2026) நிறைவு பெற்றது.
அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து இன்று ஊர்க்காவல் படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி. பிரசண்ண குமார், IPS., இ.கா.ப பயிற்சி நிறைவு விழா கவாத்து அணிவகுப்பு மரியாதையை செலுத்தி நிறைவு செய்தனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி. பிரசண்ண குமார், IPS., இ.கா.ப ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த பயிற்சி நிறைவு விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. சுதன் ஜெபர்சன் ராஜா, துணை வட்டார தளபதி வினோத் வின்சென்ட் ராஜேஸ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

0 Comments