திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீமாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ். ரகுமான் உள்ளிட்ட 100 பேரும், தவெக கட்சியினைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தங்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிதாக திமுகவில் இணைந்தவர்களை திமுக கருப்பு சிவப்பு சால்வைகளை அணிவித்து மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிட துணை அமைப்பாளர் வழுதிகை சந்துரு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் அணிகளின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.




0 Comments