பரமக்குடி அருகே 14 பவுன்நகை திருட்டு..... வாலிபர் கைது

 


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தில் ஒரு தனியார் வீட்டில் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்துபோலீசார் கூறியதாவது , ஜனவரி 30 அன்று செந்தில்குமாரின் வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக புகார் வந்தது. விசாரணைக்காக பார்க்காச்சிகுண்டம் போலீசார் வீட்டு அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை (CCTV) ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்தனர்.

அதன்படியே, ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த அஷரப் அலி (31) என்ற திருட்டில் தொடர்புடையவர் என தெரிய வந்தார். அவருக்கு மீது ஏற்கனவே 17 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதன்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் கைது செய்த அஷரப் அலியிடமிருந்து ஒட்டுமொத்தமாக 13.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments