கும்மிடிப்பூண்டியில் இலங்கை மறுவாழ்வு முகாமில் 198 தொகுப்பு வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் காட்சி மூலம் திறந்து வைத்தார்


கும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு முகாமில் ரூ.11.61 கோடி மதிப்பில் கட்டப் பட்ட 198 தொகுப்பு வீடு கனை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 934 குடும்பங்கள் சுமார் 20 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந் நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 96 தொகுப்பு வீடுகள் திறப்பு விழாவுக்கு முன்னதாகபுய லில் சேதமடைந்தது குறிப் பிடத்தக்கது.


இந்நிலையில், 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கை மறு வாழ்வு முகாமில் தொகுப்பு வீடு கள் கட்ட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில்,இலங்கை மறுவாழ்வு முகாமில் புதிதாகதொகுப்பு வீடு கள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.



இதையடுத்து, கட்டு மானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று பணிகள் நிறைவடைந்தது. கும்மிடிப் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மற் றும்செந்தில் செந்தில் வட்டாட்சி வட்டாட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர்முன்னிலையில் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது. இந்த வீடுகளின் மதிப்பு சுமார் ரூ.11.68 கோடி. 198 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை மறுவாழ்வு முகாமில் புதி தாக்கட்டப்பட்ட டப்பட்டதொகுப்பு தொகுப்பு வீடுகள் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் புதிய தொகுப்பு வீடு களை திறந்து வைத்தார். தொடர்ந்து, வீடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், கும்மி டிப்பூண்டி எம்எல்ஏடி ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர் ஜெயக்குமார், . சப் கலெக்டர்.ரவிக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.


இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர். செந்தில், வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொது மக்கள் 100க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். இறுதி யில், இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் வசிக்கும் பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரி வித்தனர்.

Post a Comment

0 Comments