கும்மிடிப்பூண்டி அடுத்த துராப் பள்ளம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு தீ மிதிதிருவிழா நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் துராப் பள்ளம் கிராமத்தில் வீராசாமி நகர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் 23.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9ஆம் தேதி காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



 இதனை தொடர்ந்து பிப்ரவரி 17 காலை 6 மணிக்கு மேல் தீ.தீமிதிப்பவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் பிற்பகல் 1.மணிக்கு அலகுபானை நிறுத்தும் நிகழ்ச்சியும் மாலை 6 மணி அளவில் 100க்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.



 இதில் கோவில் அறங்காவலர் குழு .நிர்வாகிகள் ரகுபதி குமரன் கோவில் பூசாரி விநாயகம்.கோவில் நிர்வாகி ருக்கம்மாள் சிவா ஏற்பாட்டில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏளாவூர். சுண்ணாம்புகுளம். பெரியஓபளாபுரம் ஆகிய. பகுதியை சேர்ந்த 1000.க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள்.கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments