ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஆப்பனூர் பகுதியில் உள்ள மளிகை கடைகள் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது .இதனையடுத்து அந்த பகுதியில்உள்ள சில கடைகளில் கடலாடி காவல்ஆய்வாளர் சாகுல் ஷமீது கமுதி முதுகுளத்தூர் கடலாடி வட்டாரஉணவு பாதுகாப்பு அலுவலர் முத்துச்சாமி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆப்பனூரில் உள்ள ஒருகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருத்து விற்பனை செய்தது தெரியவந்தது இதனையடுத்து 3கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

0 Comments