பொன்னேரியில் வருவாய் துறை சார்பில் 274 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அமைச்சர் சாமு நாசர் வழங்கினார்


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வீட்டு மனை பட்டாக்கள் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மாதம் செங்குன்றம் பாடிய நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பத்தாண்டுகளுக்கு மேல் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆய்வு செய்து பட்டாக்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 அதன்படி ஏலியம்பேடு,வல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு 274 பட்டாக்கள் உரிய பயனாளிகளுக்கு பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.இதனை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப்,பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், பொன்னேரி நகர் மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் ஒன்றிய செயலாளர்கள் ராஜா முரளிதரன் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார். டாக்டர் தீபன் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் உள்ளிட்ட அரசு தறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments