3 ஆயிரம் கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் அக்னி-3 ஏவுகணை பரிசோதனை வெற்றி


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரம் கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இதில் ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு நடவடிக்கைகளும் மற்றும் தொழில்நுட்பங்களும் சரியாக பரிசோதிக்கப்பட்டன.இதில், வங்காள விரிகுடாவில் இலக்கை துல்லியத்துடன் தாக்கியது. அப்போது, ஏவுகணையின் பயணத்திற்கான பாதை ரேடார் உதவியுடன் சரியாக கண்காணிக்கப்பட்டது. ஏவுகணை பரிசோதனையின்போது, அனைத்து விசயங்களையும் அது நிறைவேற்றியது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments