திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்து பாக்கம் கிராமத்தில் தைப்பூசம் முன்னிட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆத்துப்பாக்கம் சமுதாயக்கூடத்தில் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ.ஆரியத்தம்மன்.ஆலயத்திலி ருந்து 300.க்கும் மேற்பட்டோர் பெண்கள் பால்குடம் எடுத்துவரப்பட்டு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்திற்கு.மேளதாளத்துடன் கணபதி பூஜையுடன் பால் மற்றும் தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மற்றும் பால்.பிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங் காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண் பிக்கப்பட்டது.
இத்திருவிழாவிற்கு ஆலய பொறுப்பாளர்கள், கிராமபொதுமக்கள் பெண்கள்.சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள்.திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து அருள்மிகு முனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.முடிவில் ஆலயம் நிர்வாகிகள் பொதுமக்கள். சார்பில் ஏற் பாட்டில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர். இரவு. ஆசிரியர் எஸ். காட்டய்யன் கலா அஞ்சலி நாடக தேவ சபை வழங்கும் குறவஞ்சி நாடகம் நடைபெற்றது பொதுமக்கள் கண்டு களித்தனர்.




0 Comments