நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில் பின்பற்ற தாளடி சாகுபடியை கீழை யூர்,சிந்தாமணி, மகிழி, காரப்பிடாகை, கீழப்பிடாகை, திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கரில் விவசாயிகள் மேற்கொண்டனர். மேட்டூரில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்ற குளம் குட்டை வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டீசல் மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீரை இறைத்து காப்பாற்றி வருகின்றனர்.
வயல்வெளிகளை ஒட்டிய நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் தாளடி பயிர்களை காப்பாற்ற பிப்ரவரி மாதம் இறுதி வரை மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சிந்தாமணி வயல்வெளியில் இறங்கி தண்ணீர் திறக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் 40 நாள் தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வருவதாகவும் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி


0 Comments