சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் 31 வன விலங்குகள் பறிமுதல்....

 


மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் தனியாக அழைத்து தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பையில் மின்சாதன பொருட்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் அரிய வகை ஆமைகள், பாம்புகள், பள்ளிகள் உள்ளிட்ட 31 வன விலங்குகள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அழிந்து வரும் உயிரினங்கள் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவற்றை அதிகாரிகள் மீண்டும் தாய்லாந்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments