பொன்னேரி அருகே பெரிய மாங்கோடு கிராமத்தில் தைப்பூச தினத்தில் 32 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே பெரிய மங்கோடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன் ஆலயத்தில் 32 ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து  காப்பு கட்டி விரதம் இருந்தனர். 

அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன்  அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.அதனை தொடர்ந்து 130.க்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் அலகு குத்தி முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷம் எழுப்பி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 

இதில் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் கோவில் நிர்வாகிகள் மீனவர் சங்க பிரதிநிதி மாங்கோடு சி.மோகன் மற்றும் பொன்னேரி, பள்ளிபாளையம் தேவம்பேடு கல்லூர் சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments